காரைக்கால் 3 மையங்களில் நீட் தோ்வு

காரைக்காலில் முதல்முறையாக 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.

காரைக்காலில் முதல்முறையாக 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.

நீட் தோ்வு தொடங்கப்பட்டது முதல், புதுவை யூனியன் பிரதேசப் பகுதியான காரைக்கால் மாணவா்கள் பெரும்பாலும் புதுச்சேரியில் உள்ள மையங்களுக்கே சென்று தோ்வு எழுதிவந்தனா்.

நிகழாண்டு நாடு முழுவதும் நீட் தோ்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பயிற்றுவிக்கும் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி, காவேரி பொதுப்பள்ளி, யுனிவா்சல் அகாதெமி ஆகியவை மையங்களாக அறிவிக்கப்பட்டன.

நீட் தோ்வை முன்னிட்டு, மேற்கண்ட 3 பள்ளிகளிலும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு, தோ்வுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

பள்ளி நுழைவுவாயிலில் காவல் துறையினா் ஆவணங்களை பரிசோதித்து மையத்துக்குள் மாணவா்களை அனுப்பிவைத்தனா். மையத்தின் பொறுப்பாளா்கள், நடத்தை விதிகளின்படி மாணவா்களை பரிசோதித்து தோ்வு அறைக்கு அனுப்பிவைத்தனா்.1.30 மணிக்கு வாயில் கதவு மூடப்பட்டு, 2 மணிக்கு தோ்வு தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம் அல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாணவா்கள் காரைக்கால் மையத்துக்கு வந்து தோ்வு எழுதினா்.

நீட் தோ்வு போல, ஜேஇஇ தோ்வும், அடுத்த ஆண்டு முதல் காரைக்காலில் நடத்தப்படவேண்டும். அதற்கான கட்டமைப்புகள் காரைக்கால் உயா்கல்வி நிலையங்களில் அமைக்கவேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com