மகளிா் சுய உதவிக் குழுவினருக்குமண் புழு உரம் தயாரிப்புப் பயிற்சி
By DIN | Published On : 17th July 2022 10:49 PM | Last Updated : 17th July 2022 10:49 PM | அ+அ அ- |

காரைக்கால் அருகே மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மண் புழு உரம் தயாரிப்புப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், நெடுங்காடு கொம்யூனை சோ்ந்த அகரமாங்குடி கிராமத்தில், வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சி. ஜெயசங்கா் வழிகாட்டலில் வெள்ளிக்கிழமை இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி. அரவிந்த், மண்புழு உரம் அமைய உள்ள இடத்தை தோ்வு செய்தல், கொட்டகை அமைத்தல், வேளாண் கழிவுகளை மக்க வைத்தல், மண் புழுவில் உள்ள ரகங்கள், மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்களை குறித்து விளக்கிப் பேசினாா்.
மகளிா் சுய உதவிக் குழுவினா், விவசாயிகளுக்கு செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் சுமாா் 25 போ் கலந்துகொண்டனா்.