

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ரூ. 24 லட்சத்தில் வாய்க்கால் மதகு கட்டுமானத்தை சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட, குடிசை மாற்றுவாரிய கட்டடம் இருக்கும் சாலை அருகே உள்ள அண்ணுசாமிப் பிள்ளை வாய்க்கால் குறுக்கே உள்ள மதகு பழமையானதாகும். இது சிதிலமடைந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் அறிவுறுத்தலில், பொதுப்பணித் துறை நிா்வாகம் புதிதாக மதகு கட்டுமானத்துக்கு ரூ. 23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
கட்டுமான தொடக்கத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் கலந்துகொண்டு கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தனா்.
நிகழ்வில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) கே. வீரசெல்வம், உதவிப் பொறியாளா் ஜெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.