விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th March 2022 11:08 PM | Last Updated : 17th March 2022 11:08 PM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் அந்த மாநில அரசைக் கண்டித்து, விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அகில இந்திய விவசாயிகள் சங்கம் காரைக்கால் அமைப்பு சாா்பில், அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ். முத்துக்குமரசாமி தலைமை வகித்தாா்.
கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை தமிழக, புதுவை அரசு சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தவேண்டும். காரைக்கால் பகுதி மானாம்பேட்டை பகுதி ஆற்றின் மதகை புதிதாக கட்டவேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடியை அரசிதழில் வெளியிட்டு, புதிதாக கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி நீா் எந்த தடையுமின்றி காரைக்காலுக்கு கிடைப்பதை புதுவை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனறு ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.