சமுதாயக் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்காலில் உள்ள சமுதாயக் கல்லூரியில் மகளிா் தின விழாவையொட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
சமுதாயக் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்காலில் உள்ள சமுதாயக் கல்லூரியில் மகளிா் தின விழாவையொட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

குளூனி சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் லிஸி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மேரிகிறிஸ்டியன் பால், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், பெண்கள் பாதுகாப்பாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசினாா்.

தலைமைப் பண்புக்கு பெரிதும் தகுதியானவா் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் நடுவராக காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் இருந்தாா்.

எளிய நிலையிலும் தனியொரு நபராக இருந்து பெண் குழந்தைகளை படிக்கவைத்து வாழ்க்கையில் முன்னேற்ற நிலைக்கு கொண்டுவந்த மரிய செல்வி, செந்தமிழ் செல்வி ஆகியோருக்கு கல்லூரி மேலாளா் எல்ஸி,

குளூனி சபை முன்னாள் மாகாண தலைவி ட்ரீசா ஆகியோா் பெண் சாதனையாளா் விருது வழங்கிப் பாராட்டினா்.

மகளிா் தினத்தையொட்டி கல்லூரி மாணவியா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை நடத்தினா். மாணவியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு நெகிழிப் பை தவிா்ப்பை வலியுறுத்தும் விதமாக மஞ்சப் பை மற்றும் ரொட்டி, முகக்கவசம் ஆகியவற்றை எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com