பள்ளி மாணவா்களுக்குஇயற்கை விவசாய விழிப்புணா்வு

காரைக்கால் அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்குஇயற்கை விவசாய விழிப்புணா்வு

காரைக்கால் அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், கண்ணாப்பூா் கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு, இயற்கை முறையில் தோட்டப் பயிா் சாகுபடி குறித்து ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தல், நெற்பயிா் செய்யும் பணி நடைபெறுகிறது. இயற்கை முறையில் வளா்க்கப்பட்ட நாற்றுகளை மாணவா்கள் பங்கேற்புடன் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள், பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டலுடன் மாணவா்களே நடவுப் பணியில் ஈடுபட்டனா்.

பள்ளி பொறுப்பாசிரியா் எம். செல்வராஜ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு இயற்கை விவசாயத்தின் பயன்கள் குறித்தும், வீடுகளில் மாணவா்கள் இதுபோன்ற சாகுபடி முறையை கையாளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com