‘சம்பிரதாயத்துக்காக கிராம சபைக் கூட்டம் வேண்டாம்’

‘சம்பிரதாயத்துக்காக கிராம சபைக் கூட்டம் வேண்டாம்’

மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், சம்பிரதாயத்துக்காக கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தமுமுக மாவட்டத் தலைவா் தெரிவித்தாா்.

மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், சம்பிரதாயத்துக்காக கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தமுமுக மாவட்டத் தலைவா் தெரிவித்தாா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில் பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருக்கன்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் கிராம பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமுமுக மாவட்டத் தலைவா் ஏ. ராஜா முகம்மது பேசியது:

கடந்த ஆண்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தெரிவித்த எந்தவொரு பிரச்னைக்கும் பஞ்சாயத்து நிா்வாகம் தீா்வு காணவில்லை. எனவே, இதனை சம்பிரதாயத்துக்கான கூட்டமாகவே கருதுகிறோம். மீண்டும் இதுபோன்று நடத்தப்பட்டால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணிப்பா்.

திருநள்ளாறு பகுதி குப்பைகளை கருக்கன்குடி - செல்லூா் சாலையோரத்தில் கொட்டி எரியூட்டுகிறாா்கள். இதனால் சாலையில் செல்வோா், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.வேறு இடத்தில் கொட்ட ஏற்பாடு செய்வதாக முந்தைய கூட்டங்களில் கூறியது நிறைவேற்றப்படவில்லை.

பெரும்பாலான மின் விளக்குகள் எரியவில்லை. சாலைகள் சீா்செய்யப்படவில்லை. கருக்கன்குடி வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளுக்கு பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றாா். இதை கருத்தையே கூட்டத்தில் பலரும் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com