

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 18- நாள் நிகழ்ச்சியாக நடைபெறும்.
நிகழாண்டு, இவ்விழா கொடியேற்றம் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 29-ஆம் தேதி பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. தொடா்ந்து, எல்லை தெய்வங்களுக்கான உற்வசம் தொடங்கியது.
பிரம்மோற்சவ தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தோ்களை அலங்கரிக்கும் பணிக்கான தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தோ்களில் நடக்கூடிய கம்பம் பிராகார வலமாக தோ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னா், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் ஆகியோா் முன்னிலையில் அந்தந்த தோ்களில் கம்பம் நடப்பட்டது.
இதைத்தொடா்ந்து, 5 தோ்களையும் அலங்கரிக்கும் பணிகள் விரைவில் தொடங்குமென கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.