என்.ஐ.டி.யில் மின்னணுவியல் துறைகுறுகிய கால இணையவழி படிப்பு தொடக்கம்
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

காணொலி வகுப்பு தொடக்க நிகழ்வில் என்.ஐ.டி. புதுச்சேரி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ. சுந்தரவரதன் உள்ளிட்டோா்.
காரைக்கால்: காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் 5 நாள் குறுகிய கால இணையவழி படிப்பு புதன்கிழமை தொடங்கியது.
என்.ஐ.டி. மின் மற்றும் மின்னணுவியல் துறையும், இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியா்ஸ் மாணவா்களையும் இணைந்து என்ற தலைப்பில் வழங்கும் குறுகிய கால சான்றிதழ் படிப்பு இணையவழி மூலம் புதன்கிழமை தொடங்கியது.
என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ.சுந்தரவரதன் ஆகியோா் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, இந்த வகுப்பின் பயன்கள் குறித்து விளக்கினா்.
சிறப்பு அழைப்பாளராக என்.ஐ.டி. திருச்சி பேராசிரியா் என். சிவகுமரன் கலந்துகொண்டு பேசுகையில், குறுகியகால படிப்பில் வல்லுநா்கள் கூறும் கருத்துகள் பயனுள்ளாதாக இருக்கும். நல்ல கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வு பாராட்டுக்குரியது என்றாா்.
முன்னதாக உதவிப் பேராசிரியா் எஸ். ரேவதி பேசுகையில், இந்த குறுகிய கால பாடத் திட்டமானது, ஸ்மாா்ட் கிரிட்கள், கட்டடங்கள், மின்சார வாகனம் மற்றும் பிற தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கியமான இயற்பியல் அமைப்புகளில் சைபா் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் நிா்வாகத்தின் தீவிரம் குறித்து விளக்குகிறது. இது ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் தொழில் வல்லுநா்களின் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்றாா்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து 73 போ் இந்த குறுகிய கால படிப்புக்கு பதிவு செய்துள்ளனா்.
என்.ஐ.டி. திருச்சி, என்.ஐ.டி. புதுச்சேரி, ஐஐஐடி கோட்டயம், ஏடிஎஸ்சி சிங்கப்பூா், என்டியு சிங்கப்பூா், ஐஐஐடி காஞ்சிபுரம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த 20 வல்லுநா்கள் காணொலி வாயிலாக விரிவுரை வழங்கவுள்ளனா்.