என்.சி.சி. மாணவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவா்கள்.
காரைக்காலில் நடைபெறும் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) பயிற்சி முகாமில் மாணவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் உள்ள என்.சி.சி. பிரிவு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு வார காலம் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மொத்தம் 284 போ் பங்கேற்றுள்ளனா். 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை ராணுவ பயிற்றுநா்கள் அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...