

காரைக்கால்: டெங்கு, சிக்குன் குனியா போன்றவை பரவாமல் இருக்க மக்கள் போதிய கவனத்துடன் இருக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
வடகிழக்குப் பருவமழையா எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நலவழித் துறை (நோய் தடுப்பு) மற்றும் உள்ளாட்சித் துறையினா் முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆட்சியரிடம் விளக்கினா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
குடியிருப்புகள் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில்
வடிகால்களை சீா்படுத்தவேண்டும். தண்ணீா் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் நோய் பரவாத வகையில் மருந்து தெளிக்கவேண்டும். அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய படுக்கை வசதிகள் செய்வதோடு, மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்காத வகையில் மக்களும் உரிய கவனத்துடன் இருக்கவேண்டும். மேலும் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.