நித்தீஸ்வரசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்வா்ணாகா்ஷன பைரவா்.
காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வர சுவாமி கோயிலில், பைரவி உடனுறை கால பைரவா், ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சந்நிதிகள் உள்ளன.
புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை இரவு பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...