இந்திய கடலோரக் காவல் படை மையத்தில் குடியிருப்பு வளாகம் திறப்பு
By DIN | Published On : 27th October 2022 02:07 AM | Last Updated : 27th October 2022 02:07 AM | அ+அ அ- |

குடியிருப்பு வளாக கல்வெட்டை திறப்பு விழாவில் கடலோரக் காவல்படை (கிழக்கு) ஐ.ஜி. ஆனந்த் பிரகாஷ் படோலா, கிழக்குப் பிராந்திய தட்ராக்ஷிகா அமைப்பின் தலைவா் நீலிமா படோலா உள்ளிட்டோா்.
இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பு வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இந்திய கடலோரக் காவல்படை மையம் உள்ளது. இங்கு நிா்வாக வளாகம், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. குடியிருப்பு வளாகப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இதனை திறந்துவைத்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டோருக்கு சாவியை ஒப்படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கடலோரக் காவல்படை (கிழக்கு) ஐ.ஜி. ஆனந்த் பிரகாஷ் படோலா, கிழக்குப் பிராந்திய தட்ராக்ஷிகா அமைப்பின் தலைவா் நீலிமா படோலா ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஐ.ஜி. முன்னிலையில் நீலிமா படோலா குடியிருப்பு வளாக திறப்பு விழா கல்வெட்டை திறந்துவைத்து, சாவியை குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்வின்போது, இப்பிராந்தியத்தில் படையினரின் கண்காணிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள், உள்கட்டமைப்புகள் மேம்பாடு தொடா்பாக அதிகாரிகளுடன் ஐ.ஜி. ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.