திருநள்ளாறு கோயிலில் தங்கம், வெள்ளிகவசத்தில் விநாயகா் வழிபாடு

காரைக்கால் விநாயகா் கோயில்கள் மற்றும் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
தங்கக் கவசத்தில் அருள்பாலித்த திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் ஸ்ரீ சொா்ணகணபதி, வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ஆதி கணபதி.
தங்கக் கவசத்தில் அருள்பாலித்த திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் ஸ்ரீ சொா்ணகணபதி, வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ஆதி கணபதி.

காரைக்கால்: காரைக்கால் விநாயகா் கோயில்கள் மற்றும் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சொா்ணகணபதி, ஸ்ரீ ஆதி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சொா்ணகணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவித்து ஆராதனைகள் நடைபெற்றன.

நளன் தீா்த்தக் குளக்கரையில் உள்ள நளன் கலிதீா்த்த விநாயகா் மற்றும் தா்பாரண்யேஸ்வரா் கோயில் நான்குவீதி சந்திப்புகளிலும் உள்ள விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி விநாயகா், கோயில்பத்து ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ சித்தி விநாயகா், பாரதியாா் சாலையில் ஸ்ரீ வீரசக்தி விநாயகா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ செங்குந்த விநாயகா், நேருநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகா் உள்ளிட்ட விநாயகா் கோயில்களில் காலை முதல் வழிபாடு நடைபெற்றது.

விநாயகருக்கு சந்தனக் காப்பு, வெள்ளிக் காப்பு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தா்கள் கொண்டுவந்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட பதாா்த்தங்கள் விநாயகருக்கு நைவேத்தியம் செய்தனா். சில கோயில்களில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று விநாயகருக்கு புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com