தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கைக்கு முதல்வா் உத்தரவு

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

மாணவா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து நாஜிம் கூறியது: காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா் பால மணிகண்டன் இறந்த சம்பவம் தொடா்பாக, உரிய விசாரணை நடத்துமாறு முதல்வரை கேட்டுக்கொண்டேன். அதன்பேரில், மருத்துவ தலைமை அதிகாரி முரளி தலைமையில், சிறப்புக் குழுவினா் காரைக்கால் வந்து ஆய்வுசெய்தனா்.

இந்நிலையில், புதுவை முதல்வரை சந்தித்து, மாணவன் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம். நலவழித் துறை செயலா் உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமுலு, காரைக்கால் வந்த சிறப்புக் குழு தலைவா் முரளி ஆகியோரை அழைத்து, எங்கள் முன்னிலையில் முதல்வா் பேசினாா். அப்போது, மாணவா் உயிரிழப்பை தடுக்கத் தவறிய மருத்துவத் துறையினா் யாராக இருந்தாலும், அவா்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டாா். எனவே, இந்த விவகாரத்தில் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டவா்கள் மீது அரசு ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com