காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி சாா்பில், தேசிய கண்தான இருவார விழிப்புணா்வு நிகழ்ச்சியின் நிறைவாக, கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கல்லூரி மாணவா்கள் சுமாா் 150 போ் விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆட்சியரகம் வரை வந்தனா். பேரணி நிறைவில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் மாணவா்களை பாராட்டிப் பேசினாா். ஜிப்மா் மருத்துவா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.