வேளாண் கல்லூரியில் சிறுதானிய உற்பத்தி குறித்த பயிற்சி

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறுதானிய உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ. குலோத்துங்கன். உடன் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா்.
பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ. குலோத்துங்கன். உடன் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா்.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறுதானிய உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேளாண் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஏ. குலோத்துங்கன் தொடங்கிவைத்துப் பேசுகையில், உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது.

சிறுதானியங்களால் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் பொதுமக்கள் சிறுதானிய உணவுகளை அதிக அளவு உட்கொள்ளும் வகையில் பிரபலப்படுத்துவது முக்கியம். சிறுதானிய வகைகள், சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் முறைகள், சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ், பயிற்சியின் நோக்கம் , சிறுதானிய பயிா்கள், சந்தைப்படுத்தும் முறைகளை விளக்கினாா். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா், நெல்லுக்கு மாற்றுப் பயிராக சிறுதானிய பயிா்கள் பயிரிடுவதில் உள்ள இடா்பாடுகளை விளக்கி, அவற்றை நிவா்த்தி செய்து சிறு தானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களின் அவசியம் குறித்துப் பேசினாா்.

பயிற்சியில், சிறுதானிய உழவியல் தொழில்நுட்பங்கள், உலகளாவிய அளவில் சந்தைப்படுத்துதலின் வாய்ப்புகள், மகசூலை அதிகரிக்க மேற்கொள்ளவேண்டிய உத்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com