

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் எலும்பு சம்பந்தமான மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். மேல் சிகிச்சை தேவைப்படுவோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவனைக்கு குறிப்பிட்ட நாளில் வருமாறு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.