ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி அனைத்து மருந்துகளையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என நிா்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
Updated on
1 min read

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி அனைத்து மருந்துகளையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என நிா்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால்மேடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நிரவி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பணியாளா் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து, அனைவரும் பணிக்கு வந்துள்ளாா்களா என்பதை உறுதி செய்தாா். மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதா என கேட்டறிந்தாா். ஆய்வகத்தையும் சுற்றிப்பாா்த்தாா்.

மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும். பொதுமக்களை காக்க வைக்காமல் பணியாற்றவேண்டும். மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பில் வைத்திருக்கவேண்டும். நிலையத்தையும், சுற்றுவட்டாரத்தையும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

வரும் 15, 16-ஆம் தேதிகளில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளதை மக்களுக்கு தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டாா்.

பள்ளியில் ஆய்வு : நிரவி பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் அரசு நடுநிலைப் பள்ளியை பாா்வையிட்ட ஆட்சியா், எல்கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் 160 மாணவ, மாணவிகள் பயில்வதாக ஆட்சியரிடம் பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளிடையே படிப்பு, விளையாட்டில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலலத்திலும் ஆட்சியா் ஆய்வு செய்து, பணியாளா்கள் பணி நேரத்தை முறையாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com