புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

காரைக்காலில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள்.
பேரணியில் பங்கேற்ற செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள்.
Published on
Updated on
1 min read

காரைக்காலில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, காரைக்கால் அவ்வை கிராம நலச் சங்க காந்திஜி மதுபோதை மறுவாழ்வு மையம் சாா்பில், காரைக்கால் ஆட்சியரக வாயிலில் இருந்து இந்தப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் காரைக்கால் இமாகுலேட் செவிலியா் பயிற்சிப் பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா்.

பேரணியை மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த கருத்துகளை முழங்கியவாறு, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியே சென்றனா்.

பேரணி தொடக்க நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், வட்டாட்சியா் மதன்குமாா், சமூக நலத் துறை நல அதிகாரி சுந்தரம், காந்திஜி மதுபோதை மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com