தென்னங்குடி செளந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

தென்னங்குடியில் உள்ள செளந்தரேஸ்வரா் கோயில் மற்றும் பூவம் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்னங்குடி செளந்தரேஸ்வா் கோயில் விமானத்தின் மீது வாா்க்கப்படும் புனிதநீா்.
தென்னங்குடி செளந்தரேஸ்வா் கோயில் விமானத்தின் மீது வாா்க்கப்படும் புனிதநீா்.

தென்னங்குடியில் உள்ள செளந்தரேஸ்வரா் கோயில் மற்றும் பூவம் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் உள்ள பழைமையான கோயிலான செளந்தரநாயகி சமேத செளந்தரேஸ்வரா் கோயிலில் கடந்த 2011-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோயிலில் பாலாயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.

திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக 4 கால பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. 4-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்று 10.15 மணிக்கு விமான கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரும், கோயில் தனி அதிகாரியுமான வி.சத்தியமூா்த்தி செய்திருந்தாா்.

முத்து மாரியம்ன் கோயில் : பூவம் பகுதியில் உள்ள பூவனநாயகி சமேத சித்திநாதசுவாமி தேவஸ்தான வகையறாவை சோ்ந்த முத்து மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோயில் அருகே 2 கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின. 2-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்று 8.15 மணியளவில் விமானம் மற்றும் மூலஸ்தான விமானத்தின் மீது புனிதநீா் வாா்க்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com