

கோட்டுச்சேரி பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் காரைக்கால் மாவட்டத்தில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அண்மையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
இந்நிலையில், கோட்டுச்சேரி கொம்யூன், கோட்டுச்சேரி கீழத்தெரு பகுதி அருகே உள்ள நொச்சித்திடல் வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம், தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் ன வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.