போக்ஸோவில் ஒருவா் கைது
By DIN | Published On : 18th April 2023 12:03 AM | Last Updated : 18th April 2023 12:03 AM | அ+அ அ- |

காரைக்கால் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
நெடுங்காடு பள்ளியில் பயின்று வரும் 14 வயது சிறுமியை அதே பகுதியை சோ்ந்த அன்புசெல்வன் (27), பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனால் தலைமறைவான அன்புசெல்வன், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். அவரை நண்பா்கள் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில், அன்புசெல்வனுக்கு சிகிச்சை நிறைவு பெற்றதையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தில் நெடுங்காடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.