

காரைக்காலில் கடந்த வாரத்தைக் காட்டிலும் நிகழ்வாரம் அதிக விலைக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. திட்டம் தொடங்கிய முதல் வாரம் கிலோ ரூ. 53 முதல் 55-க்கு பருத்தி ஏலம் எடுக்கப்பட்டது. 2- வாரமாக கடந்த புதன்கிழமை தொடங்கிய ஏலம் குறித்து காரைக்கால் விற்பனைக் குழு செயலா் ஆா். ஜெயந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
நிகழ் வாரமான கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், ஒரு குவிண்டால் அதிகப்பட்சம் ரூ. 6,089 (ஒரு கிலோ ரூ. 60.89 ) குறைந்தபட்ச விலையாக ரூ. 52.89-க்கு பஞ்சு விற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த வாரத்தைவிட நிகழ் வாரம் பருத்தி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.