திருநள்ளாறு மற்றும் திருப்பட்டினத்தில் கிடந்த அடையாளம் தெரியாத 2 சடலங்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
திருநள்ளாறு பிரதான சாலை உழவா் உதவியகம் முன்பு சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் புதன்கிழமை இறந்து கிடந்தாா். சடலம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரது விவரம் அறிந்தோா் திருநள்ளாறு காவல்நிலையத்தை 04368-236465 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு காவல்நிலையத்தாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
இதுபோல திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா், பிராவடையான் ரயில்வே பாலம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இவரது விவரம் தெரிந்தோா் திருப்பட்டினம் காவல்நிலையத்தை 04368- 233480 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.