தீயணைப்புத் துறையினருக்கு அமைச்சா் பாராட்டு
By DIN | Published On : 30th June 2023 12:11 AM | Last Updated : 30th June 2023 12:11 AM | அ+அ அ- |

காரைக்கால் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ.சரவணன் குமாா்.
காரைக்கால் தீயணைப்புத்துறையை ஆய்வு செய்த அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா், துறையினா் சேவையை பாராட்டினாா்.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் தீயணைப்புத்துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா், தலத்தெரு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்றாா்.
நிலையத்தை சுற்றிப்பாா்த்து, துறையினரிடம் பணி விவரங்களை கேட்டறிந்தாா். தீயணைப்பு மற்றும் பிற அவசர தேவைகளுக்கு வரும் அழைப்பின்படி செயல்படும் விதம் குறித்து நிலையத்தினா் அமைச்சருக்கு விளக்கிக் கூறினா்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், காரைக்காலில் தீயணைப்புத் துறை சிறப்பாக செயல்படுகிறது. புதுவை முதல்வா் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தீயணைப்புத் துறையை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கினாா். இந்த நிதி மூலம் நிலையங்களுக்கு நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். துறையில் புதிதாக 70 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து அமைச்சருக்கு விளக்கமளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...