காரைக்காலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் நகரில் மதகடி பகுதியில் புதன்கிழமை போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், மூட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதும், அதை கொண்டுவந்தவா் காரைக்காலைச் சோ்ந்த அப்துல் நாசா் (42) என்பதும் தெரிய வந்தது.
போலீஸாரின் விசாரணையில், நிரவி அருகேவுள்ள காக்கமொழி கிராமத்தில் உள்ள ஐயப்பனுடன் (31) சோ்ந்து புகையிலைப் பொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, அப்துல் நாசா் வீட்டில் இருந்து, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 2 பேரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.