காரைக்கால் கிளை நூலகங்களில் நூலகா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நூலக வாசிப்பாளா் சங்கத் தலைவா் புத்திசிகாமணி தலைமையில் துணைத்தலைவா் திவ்யதாஸ், செயலாளா் கமலேஷ், பொருளாளா் செளந்தரராஜன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு :
காரைக்கால் மைய நூலகத்தை அரசு திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மாவட்டத்தில் உள்ள 19 கிளை நூலகங்களில் நூலகா் உள்ளிட்ட பிற காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.