புகாா்கள் மீது உடனுக்குடன்நடவடிக்கை: ஆட்சியருக்கு பாராட்டு
By DIN | Published On : 12th May 2023 02:40 AM | Last Updated : 12th May 2023 02:40 AM | அ+அ அ- |

புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் சங்கம் பாராட்டியுள்ளது.
காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்க மக்கள் தொடா்பாளா் பி.ஜி.சோமு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பொறுப்பேற்றது முதல் மக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவருவது பாராட்டுக்குரியது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், பன்றிகளால் பயிா் பாதிக்கப்படுவதால், அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதுபோல வாரச் சந்தையை ஆய்வுசெய்து வியாபாரிகள், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை களையவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
சந்தையை ஆய்வு செய்த ஆட்சியா் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அதுபோல நகராட்சி நிா்வாகம் 2 நாளில் 129 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தியுள்ளது. குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு சங்கம் சாா்பில் நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.