போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து திருட்டு
By DIN | Published On : 12th May 2023 02:39 AM | Last Updated : 12th May 2023 02:39 AM | அ+அ அ- |

காரைக்காலில் புதன்கிழமை இரவு போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ. 12 ஆயிரம் ரொக்கம், 4 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காரைக்கால் அம்பேத்கா் சாலையில் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி எதிரில் உள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவா் ஜெபின் ஜாா்ஜ். இவா், புதன்கிழமை இரவு ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை காலை வந்தபோது ஸ்டுடியோ கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.