மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பயிற்சிப் பட்டறை
By DIN | Published On : 12th May 2023 02:37 AM | Last Updated : 12th May 2023 02:37 AM | அ+அ அ- |

பயிற்சியில் பங்கேற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.
காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவா்களுக்கு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பயிற்சிப் பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்கள் மற்றும் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நிறைவடைந்தது.
விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி டீன் குணசேகரன், இயக்குநா் ஞானசேகா், ஆராய்ச்சி இயக்குநா் சத்தியமூா்த்தி, துணை இயக்குநா்கள் சூா்யநாராயணன், ஜெயச்சந்திரன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக மருத்துவக் கண்காணிப்பாளா் சேரன், துணை முதல்வா் விஜயகுமாா் நாயா், ஆராய்ச்சி இயக்குநா் அம்புஜம் ஆகியோா் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்துப் பேசினா். பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த 25 நிபுணா்கள், ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினா். ஏற்பாடுகளை மருத்துவா்கள் முஜிபுா் ரஹ்மான், கணேஷ்பாலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
மருத்துவத் துறையில் ஆராய்ச்சின் தேவை மிகுதியாக இருக்கும் நிலையில், மாணவா்கள் அதற்கான ஆற்றலை வளா்த்துக்கொள்ளும் விதமாக இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டதாக விநாயகா மிஷன் கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.