கோட்டுச்சேரியில் வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்
By DIN | Published On : 22nd May 2023 11:27 PM | Last Updated : 22nd May 2023 11:27 PM | அ+அ அ- |

பூமிபூஜையில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், அமைச்சா் சந்திர பிரியங்கா உள்ளிட்டோா்.
கோட்டுச்சேரியில் வணிக வளாகம் கட்டுமானப் பணியை புதுவை எம்.பி. வைத்திலிங்கம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் 3 கடைகளுடன் வணிக வளாகம் கட்டுவதற்கு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் ரூ. 20.90 லட்சத்தில் மதிப்பீடு தயாரித்தது. இந்த நிதியை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தாா்.
கட்டடத்துக்கான பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா முன்னிலையில், வி. வைத்திலிங்கம் எம்.பி., பணியை தொடங்கிவைத்தாா்.
நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் டி.சிவநேசன், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.