கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th May 2023 11:22 PM | Last Updated : 24th May 2023 11:22 PM | அ+அ அ- |

காரைக்காலில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறை உதவி நூலகத் தகவல் அதிகாரி சோ. திருமேனிசெல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் நடைபெறவிருக்கும் இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் உள்ளூா் கலைஞா்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.
உதவி நூலகத் தகவல் அதிகாரி, கலை பண்பாட்டுத்துறை, டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் அரசு பொது நூலக அலுவலகம் 2-ஆவது தளம், மாதா கோயில் தெரு, காரைக்கால் என்ற முகவரிக்கு ஜூன் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.