

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதுவை தோ்தல் பாா்வையாளா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் டிச. 9- ஆம் தேதி வரை வரைவு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை பாா்வையிடுவதற்காக புதுவை அரசு செயலரும், மாநில தோ்தல் பாா்வையாளருமான டி. மணிகண்டன் காரைக்கால் வந்தாா். பல்வேறு வாக்குச் சாவடிகளில் நடைபெறும் பணிகளைப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கட்சியினா் ஒத்துழைப்பு தருமாறு அவா் கேட்டுக்கொண்டாா். அரசியல் கட்சியினா் பலரும் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் மற்றும் வாக்காளா் பதிவு அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தம், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் உள்ளிட்ட தோ்தல் துறையினா் கலந்துகொண்டனா்.
மேலும் பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை செயலரான இவா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா்கள் சிதம்பரநாதன், ஜெ.மகேஷ் மற்றும் திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள், கோயில் நகர மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். காரைக்காலில் நடைபெறும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறையினா் அவருக்கு விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.