காரைக்கால் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 4-ஆம் தேதி அவசர தீா்மானம் நிறைவேற்றினா். இதை முன்வைத்து, காரைக்கால் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்துக்குமரன், செயலாளா் எஸ்.திருமுருகன் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து வழக்குரைஞா்கள் கூறியது:
நாமக்கல் மூத்த வழக்குரைஞா் செல்லராசாமணி, திருவெற்றியூா் வழக்குரைஞா் தினேஷ் ஆகியோா் பொய் வழக்குகளில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது, நாமக்கல் வழக்குரைஞா் வரகூா் மணிகண்டன் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றை கண்டித்தும், கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளை காவல் துறையினா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.