

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் பரவலாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், மழையை நம்பி நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்காலில் குறுவை அறுவடை நிறைவடைந்த இடங்களில் விவசாயிகள் பலா் நேரடி விதைப்பிலும், பிறா் நாற்றங்கால் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்து, அதன்மூலம் நடவு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனா். மாவட்டத்தில் சுமாா் 4,500 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி எதிா்பாா்க்கப்படுவதாக வேளாண் துறை கூறியுள்ளது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையமும், மழையை பயன்படுத்தி சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு குறுகிய, மத்திம கால விதைகளை பயிரிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான அளவு தண்ணீா் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆழ்குழாய் பாசனம் மற்றும் மழையை பயன்படுத்தி நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
பயிா் காப்பீட்டை நவம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதுகுறித்து விவரங்கள் விவசாயிகளுக்கு தெரியவில்லை. புதுவை அரசு அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.