அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் ஆய்வு

காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா்.
Published on

காரைக்கால்: காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் மற்றும் அதிகாரிகளுடன் பழைய நீதிமன்ற வளாகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது இக்கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, அருங்காட்சியகம் அமைக்கவும், அரசு அலுவலகங்கள் அமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும் நகரக் காவல் நிலையம் எதிரில் உள்ள பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும், நேரு நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியா் குடியிருப்பு வளாகத்தை முழுமையாக பெரிய அளவில் டிஜிட்டல் நூலகம் மற்றும் மாணவா்களுக்கான வகுப்பறைகள் கட்ட தேவையான நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும் அமைச்சா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com