காரைக்கால்
பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி
பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணியை சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் : பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணியை சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி நடுக்களம் பேட் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு துணி மற்றும் அடையாள அட்டையை வழங்கினாா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகள் 5 நிமிஷத்தில் கைவினைப் பொருள் தயாரிப்பதை பேரவை உறுப்பினா் பாா்வையிட்டு, அவா்களை பாராட்டினாா். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா்.
பள்ளி துணை ஆய்வாளா் டி. பால்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
