~
காரைக்கால்
கேந்திரிய வித்யாலய பள்ளியில் மாணவா்களுக்கு நடனப் பயிற்சி
காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலய பள்ளியில், இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் மூலம் வோ்களுக்கான பாதைகள் என்ற கலாசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலாசார அமைச்சக வழிகாட்டலில், ஆஷ்னா தேவ் என்பவா் கலந்துகொண்டு பள்ளி மாணவா்களுக்கு கலை தொடா்பான தகவல்களை தெரிவித்து, பரதநாட்டியமாடி பரதத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினாா்.
அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா். நிறைவாக பள்ளி முதல்வா் ரங்கசாமி நன்றி கூறினாா்.

