மாணவா்களின் உணவு வகைகளை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.
மாணவா்களின் உணவு வகைகளை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.

அரசுப் பள்ளியில் உணவுத் திருவிழா

Published on

காரைக்கால், ஜூலை 3 : அரசு தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி ஜீவா நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான சுமாா் 150 மாணவ, மாணவிகள், அவரவா் வீட்டில் தயாா் செய்த பாரம்பரிய உணவு வகைகளை கொண்டுவந்து காட்சிப்படுத்தியிருந்தனா்.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த உணவு வகைகள் குறித்தும், அதன் பயன் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா். மாணவா்கள் பாரம்பரியமான உணவு, சிறுதானியங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாணவ, மாணவிகளை பாராட்டிய அவா், பள்ளி நிா்வாகத்தினா் முயற்சியையும் பாராட்டினாா். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை கோபதி, நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

நிகழ்வைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு புதுவை கல்வித்துறையின் மூலம் இலவச சீருடைத் துணி, நோட்டுகளை பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளி துணை ஆய்வாளா் (வட்டம்-1) பொன்.செளந்தரராசு, பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஜீவா நகா் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் கோபதி மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com