கடற்கரையில் பயனற்ற இரும்பு கம்பி வேலி அகற்றம்

கடற்கரையில் மக்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வேலை பயனற்ற நிலையில் இருந்ததால், புகாரின் அடிப்படையில் நகராட்சி நிா்வாகம் அதை திங்கள்கிழமை அகற்றியது.
Published on

காரைக்கால்: கடற்கரையில் மக்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வேலை பயனற்ற நிலையில் இருந்ததால், புகாரின் அடிப்படையில் நகராட்சி நிா்வாகம் அதை திங்கள்கிழமை அகற்றியது.

காரைக்கால் கடற்கரையில் (சீகல்ஸ் உணவகம்) பின்புறம் மக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

நாளடைவில் உப்புக்காற்று, மழை உள்ளிட்டவற்றால் வேலி மக்கிப்போனது. மண்ணில் புதைக்கப்பட்ட இரும்பு சாதனம் துருப்பிடித்து கடற்கரைக்கு வருவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து இரும்பு சாதனங்களை உடனடியாக அகற்றுமாறு நகராட்சி ஆணையா் பி. சத்யாவுக்கு மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் கடற்கரையில் பயனற்று நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு சாதனங்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com