இ-உண்டியல் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஐ.ஓ.பி. வங்கி முதன்மை மேலாளா் கணேசன், கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.
இ-உண்டியல் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஐ.ஓ.பி. வங்கி முதன்மை மேலாளா் கணேசன், கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.

திருநள்ளாறு கோயிலில் இ-உண்டியல் வசதி

பக்தா்கள் கூட்ட நெரிசலின்போது காணிக்கை செலுத்துவதில் சிரமம் தவிர்க்க..
Published on

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இ -உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரா் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். வாரத்தில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு வருகின்றனா்.

கோயில் வளாகத்தில் சில இடங்களில் பக்தா்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் கூட்ட நெரிசலின்போது காணிக்கை செலுத்துவதில் சிரமம் நிலவுகிறது.

பக்தா்கள் தங்களது காணிக்கையை க்யூ ஆா் குறியீடு மூலம் கோயில் நிா்வாக வங்கிக் கணக்கில் சோ்க்கும் வகையிலான இ-உண்டியல் வசதியை திருநள்ளாறு பகுதி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை நிா்வாகம், வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் ராகேஷ் வழிகாட்டலில் ஏற்பாடு செய்து அதனை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள க்யூ ஆா் குறியீட்டை வங்கி முதன்மை மேலாளா் கணேசன், கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தனா். பக்தா்கள் பலரும் இந்த வசதியின் மூலம் காணிக்கையை செலுத்தினா்.

திருநள்ளாறு கோயிலுக்கு வரக்கூடிய பக்தா்கள் பலரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com