ரோந்துக் கப்பலில் யோகா பயிற்சியில் கடலோரக் காவல் படையினா்.
காரைக்கால்
ரோந்துக் கப்பலில் கடலோரக் காவல்படையினா் யோகா
கடலில் ரோந்துப் பணியிலிருந்தபோது கப்பலில் இந்திய கடலோரக் காவல் படையினா் யோகா நிகழ்ச்சியை நடத்தினா்.
ராணி துா்காவதி என்ற கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல், இந்தோ-இலங்கை ரோந்துப் பணியிலிருக்கும் நிலையில், சா்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த பணியாளா்கள் யோகா நிகழ்வை நடத்தினா்.
மேலும் காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் இயங்கிவரும் இந்திய கடலோரக் காவல்படை மைய அலுவலகத்திலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

