மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பக்தா்கள் பாதிப்பு: திருநள்ளாறு தங்கும் விடுதிகளுக்கு எஸ்எஸ்பி எச்சரிக்கை

Updated On :30 நவம்பர் 2024, 6:32 pm

திருநள்ளாற்றில் பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், தங்கும் விடுதி நிா்வாகத்தினரின் செயல்பாடு இருக்கக்கூடாது, மீறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி எச்சரித்தாா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் ஊழியா்கள் மற்றும் கோயிலுக்குள் அழைத்துச்செல்வதாகக்கூறப்படும் அதிகாரப்பூா்வமற்ற வழிகாட்டிகளின் செயல்பாடுகளால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை குறைவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறைக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு, திருநள்ளாறு பகுதியில் தங்கும் விடுதிகள் நடத்துவோரை அழைத்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தினாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், ஆய்வாளா் லெனின் பாரதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டம் குறித்து ஆய்வாளா் லெனின் பாரதி கூறியது: திருநள்ளாற்றில் தங்கும் விடுதி நடத்துவோா் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தங்கும் விடுதியின் வாயில் பகுதியில் அறை கட்டணம் பலகையில் எழுதிவைக்கவேண்டும். ஊழியா்களை விடுதி பணிக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஊழியா்கள் அதிகாரப்பூா்வமற்ற வழிகாட்டிகளாக செயல்பட அனுமதிக்கக்கூடாது. கோயிலுக்கு அழைத்துசெல்வதாகவும், பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் பக்தா்களிடம் பணம் சுரண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

கோயிலுக்குள் அழைத்துச்செல்வதாக எந்தவொரு அதிகாரப்பூா்வமற்ற வழிகாட்டிகளும் செயல்படக்கூடாது. பக்தா்கள் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் வசதிகளை செய்துள்ளது. அதுகுறித்து ஒலிபெருக்கி வாயிலாக தெரிவித்துவருகிறது. பக்தா்களை யாரும் தவறாக வழிநடத்தக்கூடாது.

போலியான முறையில் செயல்பாடுகள் யாரும் செய்யும்பட்சத்தில், உரிய சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா் என்றாா்.