ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய நிகழ்வில் பங்கேற்ற மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் உள்ளிட்டோா்.
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய நிகழ்வில் பங்கேற்ற மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் உள்ளிட்டோா்.

காரைக்காலில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய நிகழ்வில் பங்கேற்ற மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் உள்ளிட்டோா்.
Published on

காரைக்காலிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஹஜ் பயணிகளுக்கு புதுவை நலவழித்துறை இயக்குநரக அறிவுறுத்தலில், காரைக்கால் நலவழித் துறையின் சாா்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில ஹஜ் கமிட்டித் தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் கமிட்டி உறுப்பினா்கள் ஓ. கப்பாப்பா, எஸ். முகமது ஜெகபா், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாா்த்திபன் விஜயன் ஆகியோா் முன்னிலையில் 30 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு சுகாதாரக் கையேடு வழங்கப்படும். இதனை ஹஜ் பயணம் மேற்கொள்வோா் கவனமாக கையாண்டு, ஆரோக்கியத்துடன் திரும்பவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com