தெரு நாய்கள் பிரச்னைகள் தொடா்பாக புகாா் அளிக்கலாம்

Published on

தெரு நாய்கள் பிரச்னைகள் தொடா்பாக 100, 101, 1033 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்றம் கடந்த நவ.7-ஆம் தேதியிட்ட உத்தரவில், சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் இதர பொது பயன்பாட்டு இடங்களில் தெரு நாய்களின்றி பராமரிக்கவேண்டும். ஒவ்வொரு பொது பயன்பாட்டு இடத்திலும், நாய்கள் இல்லாமல் பராமரிப்பது, நாய்க்கடிக்கான மேல் நடவடிக்கைகள் எடுப்பது, நாய்க்கடியை தடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாக ஒரு தலைமை அதிகாரியை நியமித்து, அவரின் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரத்துடன் பதாகை பொது இடத்திலும், காரைக்கால் நுழைவுப் பகுதியிலும் வைக்க அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொதுமக்கள், காவல் துறை எண் 100, தீயணைப்பு எண் 101, தேசிய சாலை எண் 1033 போன்ற பொது கட்டணமில்லா எண்களை பயன்படுத்தி சேவைகளை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com