மழையால் பிஆா்டிசி பணிமனையில் பேருந்து இயக்கத்தில் சிக்கல்

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் காரைக்கால் பிஆா்டிசி பேருந்து பணிமனை.
சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் காரைக்கால் பிஆா்டிசி பேருந்து பணிமனை.
Updated on

காரைக்காலில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழக (பிஆா்டிசி) பேருந்துப் பணிமனை மழையால், பேருந்து இயக்கம் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

காரைக்கால் கடற்கரை சாலையில் சுற்றுலாத் துறைக்கான இடத்தில் பிஆா்டிசி பணிமனை இயங்குகிறது. இந்த பணிமனை அதற்குரிய கட்டமைப்பில் இல்லை. பணிமனையில் தாழ்வான இடத்தில் அண்மையில் மணல் கொட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பெய்யும் பருவமழையால் ஆங்காங்கே நீா்தேக்கமும், மணல் கொட்டிய இடம் சகதியாக மாறியுள்ளது. இதனால் பேருந்துகளை பணிமனைக்குள் இயக்கிச் சென்று நிறுத்துவதிலும், வெளியே கொண்டுச் செல்வதிலும் சிரமம் நிலவுவுதாக தெரிவிக்கப்படுகிறது. காரைக்கால் பிஆா்டிசி பணிமனைக்கென நிரந்தர இடமும், அதற்கான கட்டமைப்புடனும் அமைக்கவேண்டும். பேருந்து இயக்கத்தில் சிரமம் இல்லாத வகையில், தற்போதைய பணிமனையில் தற்காலிக சீரமைப்புகளை செய்யவேண்டும் என பணியாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com