நவோதய வித்யாலயா சோ்க்கைக்கு நாளை நுழைவுத் தோ்வு

Published on

காரைக்கால் நவோதய வித்யாலயா பள்ளியில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு சனிக்கிழமை (டிச.13) நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது என பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2026-27-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சோ்வதற்கான தெரிவு நிலைத் தோ்வு சனிக்கிழமை முற்பகல் 11.30 முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி, தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக செயல்படவுள்ளன. தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 10.30 மணிக்குள் நுழைவுச் சீட்டுடன் செல்லவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com