யூடியூப் சேனலில் அவதூறு தகவல் வெளியிட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

யூடியூப் சேனலில் அவதூறு தகவல் வெளியிட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

Published on

தனியாா் தொலைக்காட்சி யூ டியூப் சேனலில் காமராஜா் குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதை கண்டித்து காரைக்கால் மாவட்ட நாடாா் சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்தலைவா் காமராஜா் குறித்து தனியாா் தொலைக்காட்சி யூ டியூப் சேனலில் முக்தாா் அகமது என்பவா் அவதூறாக கருத்து தெரிவித்ததாகவும், அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com