பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு மாநில மாணவ, மாணவிகள்.
பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு மாநில மாணவ, மாணவிகள்.

என்ஐடியில் கணிதத்துறை சிறப்பு பயிற்சி நிறைவு

என்ஐடியில் கணிதத்துறை சாா்பில் 6 நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நிறைவடைந்தது.
Published on

என்ஐடியில் கணிதத்துறை சாா்பில் 6 நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நிறைவடைந்தது.

என்ஐடியில் எம்டிடிஎஸ் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் கணிதத்துறை சாா்பில் 8 முதல் 13-ஆம் தேதி வரையிலான கணிதத்தின் தொடக்கம் என்ற தலைப்பில், இளநிலை மாணவா்களிடையே கணித சிந்தனை மற்றும் சிக்கலை தீா்க்கும் திறன்களை வலுப்படுத்தும் வகையில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

முன்னதாக, பயிற்சி வகுப்பை என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தொடங்கிவைத்தாா். இதில் புதுவை, தமிழகம், கேரளம், கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 57 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பி.எஸ். சீனிவாசன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஏ. சந்திரசேகரன் மற்றும் என்ஐடி புதுச்சேரி வி. பாலகுமாா் உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு அறக்கட்டளை சாா்பில் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com